• Jul 25 2025

முற்றிய வாக்குவாதம்... பெண்ணால் கோபத்திற்குள்ளான கோபிநாத்... மன அழுத்தத்தில் தொகுப்பாளர்... பரபரப்புடன் வெளிவந்த வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய விவாத நிகழ்ச்சியான 'நீயா நானா' ஷோ ஆனது கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களை  பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஷோவை தொகுப்பாளர் கோபிநாத் நடத்தி வருகிறார். 


இந்த நிகழ்ச்சி இன்றுவரை மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க முக்கிய காரணம் அதில் விவாதிக்கும் தலைப்புகளும், நடுநிலையாக பேசி வரும் கோபிநாத்தும் தான் ஆகும். இந்நிலையில் தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அந்தவகையில் இந்த வார நிகழ்ச்சியில் மனநல சிகிச்சை வேண்டாம் , மனநல சிகிச்சை வேண்டும் என தலைப்பின் கீழ் விவாதம் நடைபெற்றுள்ளது. இந்த விவாதத்தின் போது மனநல சிகிச்சை வேண்டும் என்று கூறும் பெண்ணிடம் கோபிநாத் பேச்சுக்கொடுக்கவே, அவர் கோபிநாத்தை பேச விடாமல் தடுத்து பேசிக்கொண்டு இருக்கின்றார். 


அதற்கு கோபிநாத் தான் கூறுவதை கேட்டு விட்டு பேசுமாறு கூறுகின்றார். ஆனால் அந்தப் பெண்ணோ மீண்டும் மீண்டும் கோபிநாத்தை மறுத்துப் பேசுகின்றார். இதனால் கோபிநாத் காண்டாகி என்னை STRESS ஆக்காதிங்க என கூறி கடுப்பாகியுள்ளார். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement