• Jul 26 2025

இதுவரைக்கும் செய்யாத செயலை செய்த கோபிநாத்-திடீரென நீயா நானா ரூல்ஸை மாற்றி விட்டாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நீயா நானா ஷோவில் வாரம்தோறும் ஒரு வித்தியாசமான தலைப்பில் விவாதம் இடம்பெற்று வருகிறது. இந்த வாரம் நடந்த விவாதத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் ஒரு பக்கம், அவர்களது கணவர்கள் இன்னொரு பக்கம் என விவாதம் நடைபெற்றது.

அப்போது ஒரு பெண் தனது கணவருக்கு படிப்பறிவு இல்லை என ஏளனமாக பேசினார். குழந்தையின் progress report கொடுத்தால் அதையே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டிருப்பார், ABCD என படித்துக்கொண்டிருப்பார், அதனால் தான் நானே கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவேன் என அந்த பெண் கலாய்த்து சொன்னார்.

மேலும் அப்படி என்ன ஒரு மணி நேரம் பார்ப்பீர்கள் என தொகுப்பாளர் கோபிநாத் கேட்க, அந்த தந்தை சொன்ன பதில் தான் எல்லோரையும் நெகிழ வைத்தது.

நான் அதிகம் படிக்கவில்லை, நான் எடுக்காத மார்க்கை என் மகள் எடுப்பதை பார்த்து ரசிப்பேன் என  அந்த தந்தை கூறினார். மேலும் என் மகளுக்கு டாக்டர் ஆக வேண்டும் என ஆசை, அதை நிறைவேற்றுவேன் எனவும் அவர் கூறினார்.

அதை கேட்ட கோபிநாத் தான் நீயா நானா ரூல்ஸை மாற்றி ஷோவின் இடையிலேயே சிறந்த தந்தையின் கிப்ட்டை கொடுப்பதாக  தெரிவித்தார்.

மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் அந்த அப்பாவை பாராட்டி வருகின்றனர்.  படிக்காத கணவர் என்பதை இப்படி எல்லோர் முன்பும் கேவலமாக கூறி சிரித்த மனைவியை வறுத்தெடுத்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement