• Jul 23 2025

"மகளுக்கு ஒரு லவ் லெட்டர் கூட வரல" வேதனையில் தாய்... பதிலால் ஷாக் கொடுத்த கோபிநாத்.. விழுந்து விழுந்து சிரித்த அரங்கம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுமே பொதுவாக ரசிகர்களை கவர்ந்தவை தான். அதிலும் குறிப்பாக 'நீயா நானா' நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிகழ்சியானது 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. 


மேலும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளின் கீழ் தொகுப்பாளர் கோபிநாத் பிரமாதமாக நடத்தி வருகிறார். இதில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், பொருளாதாரம் சார் விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப் படுகின்றன. 

இந்நிலையில் இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதாவது "லவ் பண்ண சொல்லும் பெற்றோர்கள் மற்றும் காதல் அமையாத பிள்ளைகள்" என்ற தலைப்பின் கீழ் இந்த விவாதம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


அந்தவகையில் தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவில் தாய் ஒருவர் தனது மகளுக்கு 23 வயதாகியும் ஒரு லவ் லெட்டர் கூட இதுவரை வரவில்லை என்று கூறி கவலைப்பட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் நான் என்ன பண்ணுறது, லவ் செட் ஆகவில்லை என்று பதிலளிக்கின்றார்.


மேலும் மற்றோர் அம்மாவும் மகனுக்கு காதல் அமையவில்லை என்று கூற உடனே கோபிநாத் "பெரிய பையன் லவ் பண்ணாட்டில் என்ன..? சின்ன பையன் நிச்சயம் இந்த நேரத்துல ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருப்பான்" என்று கூறி அதிர்ச்சி அவர்களுக்கு கொடுத்துள்ளார்.இதனைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.


Advertisement

Advertisement