• Jul 25 2025

தமிழை அசோசியேஷன் தலைவராக உட்காரவைத்த கோதை- அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கும் அர்ஜுன்- வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் முக்கியமான தொடராக தமிழும் சரஸ்வதியும் தொடர் மாறியுள்ளது. கடந்த சில வாரங்களாக அசோசியேஷன் தேர்தல் மற்றும் அதையொட்டிய சூழ்ச்சிகள் என பரபரப்பாக இந்த சீரியல் சென்றது. இந்நிலையில் தற்போது அசோசியேஷன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 இதில் நீண்ட பிரச்சினைகள் மற்றும் சூழ்ச்சிகளுக்கிடையில் தமிழ் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அசோசியேஷன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ், தலைவர் பதவியை ஏற்கும் வகையில், வருகிறார். 


அவருக்கு முன்னாள் தலைவரான கோதை அம்மாள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகிறார். மேலும் முன்னாள் தலைவர் என்ற அடிப்படையில், தற்போது தலைவராகியுள்ள தமிழை அவர், அந்த இருக்கையில் அமர வைக்கிறார். 

தன்னுடைய மகனிடம் அதிகமாக கோபம் கொண்டு, அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய கோதை, தற்போது அவரை தலைவர் இருக்கையில் அமர வைத்துள்ளது, சரஸ்வதி உள்ளிட்ட பலருக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement