• Jul 25 2025

தமிழை நினைத்து பெருமைப்பட்ட கோதை- ராகினியை திட்டிய கார்த்திக்- செம குஷியில் இருக்கும் சரஸ்வதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோதைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ராகினி நேராக தமிழ் வீட்டுக்குச் சென்ற கத்துகின்றார். எல்லோரும் அம்மாவுக்கு இப்படி ஆனதுக்கு நீ தான் கரணம் என்று சொல்லுறாங்க ஆனால் உண்மையில் அம்மாவுக்கு ஆனதற்கு நீ மட்டும் தான் காரணம். உன்னால தான் அம்மாவுக்கு இப்படி நெஞ்சுவலி வந்திச்சு என்று திட்டுகின்றார்.


இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ் கோயிலுக்கு சென்று கோதைக்காக வணங்குகின்றார்.இதனை அவரது அப்பா மறைந்திருந்து பார்த்து விட்டு கோதையிடம் சொல்ல கோதை சந்தோசப்படுகின்றார். அந்த நேரம் ராகினி தமிழைத் திட்ட எல்லாவற்றையும் முறையாக விசாரித்தால் என்ன நடந்தது என்று தெரிய வரும் என்று கூறுகின்றார்.

இதனால் அர்ஜுன் குடும்பம் அதிர்ச்சியடைகின்றது.இதனைத் தொடர்ந்து கோதை தமிழுக்கும் இந்த குடும்பத்திற்கும் சம்மந்தமில்லை அதைப் பற்றி இங்க சொல்லாதீங்க என்று சொல்கின்றார்.பின்னர் சரஸ்வதிக்கு போன் செய்து வசு நடந்ததெல்லாம் சொல்ல சரஸ்வதி தமிழ் கோயிலுக்கு போனதை நினைத்து சந்தோஷப்படுகின்றார்.


பின்னர் தனது மாமாவை நேரில் சந்தித்த சரஸ்வதி வீட்டில் நடந்ததைப் பற்றி கேட்கின்றார். அதற்கு சரஸ்வதியின் மாமா சமாளிக்கின்றார்.பின்னர் சரஸ்வதி தான் செய்து வந்த பிரியாணியைக் கொடுக்கின்றார். இதனை அவர் தனியாக வசுவின் ரூமுக்குள் இருந்து வசுவுடன் சாப்பிடுகின்றார். இதனை அர்ஜுனின் அக்காவின் கணவர் மறைந்து நின்று பார்க்கின்றார் இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement