• Jul 25 2025

தன்னை பிளேட் மூலம் வெட்டியவரின் இறப்பிற்கு கதறி அழுதுள்ள Gp முத்து- அடடே இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா ?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கி சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இந்த நிகழ்ச்சியில் யூடியூப் பிரபலமாகக் கலந்து கொண்டவர் தான் ஜி.பி முத்து. இவரது பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

அத்தோடு பிக்பாஸில் கலந்து கொண்டாலும் தனது பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக தானாகவே வீட்டிலிருநது வெளியேறினார். இதனைத் தொடர்ந்து மீண்டும் யூடியூப் தளத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.


 இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்தும் மீண்டு வந்தார்.

இந்நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்த ஜி.பி.முத்து எனக்கும் என்னுடைய தம்பிக்கும் எப்படி சண்டையில் எப்படி தழும்புகள் வந்தது எனக் கூறியிருந்தார். நான் தங்க பட்டறையில் வேலை செய்யும் போது நான் நல்ல வேலை செய்வதினால் நல்ல வருமானம் கிடைத்தது. அதேநேரத்தில் என்னுடைய குணம் வேறு என்னுடைய தம்பியுடைய குணம் வேறு. இதனால் பல சண்டைகள் நடக்கும் அப்படி ஒரு சண்டையில் தான் என்னை தடுத்து நிறுத்துவதற்காக என்னுடைய அம்மா மற்றும் தங்கை என்னை பிடித்துக் கொண்டனர்.


இதனால் என் தம்பி சண்டை போடும் போது கையிலிருந்த பிளேடின் மூலம் உடல் முழுவதும் வெட்டிவிட்டான். பின்னர் என்ன பிசு பிசுவென்று இருக்கிறது என்று பார்த்தால் உடல் முழுவதும் அவ்வளவு ரத்தம். இதற்கு பின்னர் என்னுடைய நண்பர் ஒருவர் தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மொத்தமாக எனக்கு 175 தையல் போடப்பட்டது இருந்தாலும் அதிலிருந்து நான் மீண்டு வந்துவிட்டேன். தற்போது என்னுடைய தம்பியும் இறந்து விட்டார் இந்த காயங்களினால் துடித்ததை விட தம்பி இறந்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை. பின்னர் அவருடைய குழந்தைகளும் நான் தான் பார்த்து கொண்டு வருகிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement