• Jul 25 2025

பிரபல ரியாலிட்ரி ஷோவில் சட்டையைக் கழட்டி மாஸ் காட்டிய ஜி.பி முத்து- எல்லாம் ரோபோ ஷங்கரின் வேலை தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்ம் ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் "அண்டாகாகசம்". இந்த நிகழ்ச்சியினை பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இதில் இரண்டு அணிகளாக பிரபலங்கள் உள்ளிட்டோர் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். கேள்விகள், பரிசு பொருட்கள் என அண்டாகாகசம் நிகழ்ச்சி முழுக்க முழுக்க சுவாரஸ்யம் நிறைந்த படி தான் இருக்கும். அதிலும், மாகாபா செய்யும் காமெடிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.


இந்த நிலையில், அண்டாகாகாசம் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் ஜிபி முத்து கலந்து கொண்டுள்ளார்.அவர் தனது மனைவி உள்ளிட்டோருடன் ஒரு பக்கம் களமிறங்க, மறுபக்கம் ரோபோ ஷங்கர் குடும்பத்தினருடன் பங்கெடுத்துள்ளார். இதில் பரிசு பொருட்களை தேர்ந்தெடுக்கும் சுற்றும் உள்ளது. 

அதில் ஜிபி முத்து தனியாக உள்ளே செல்லும் போது சட்டையை கழற்றுமாறும் ரோபோ ஷங்கர் கூறுகிறார். இதனை நம்பி ஜிபி முத்துவும் சட்டையை கழற்றும் காட்சிகள், பார்வையாளர்கள் கவனத்தையும் பெற்று வருகிறது.


மேலும் இது தவிர ஜி.பி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானதை அடுத்து தற்பொழுது பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.



Advertisement

Advertisement