• Jul 25 2025

புதுத் திட்டம் தீட்டிய குணசேகரன்... கலங்கி நிற்கும் நந்தினி... கோபத்தில் கொந்தளிக்கும் ஜனனி.. விறுவிறுப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் நேற்றைய எபிசோடில் 40 சதவீத சேரை குணசேகரனுக்கு எழுதி கொடுத்துவிட்டு மண்டபத்தில் இருந்து கிளம்பிய அப்பத்தா நடு ரோட்டில் மயங்கி விழுந்து கிடக்க ஜனனி மற்றும் சக்தி என இருவரும் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

இந்த நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கதிர் "அதுதான் மண்டபத்துல வச்சி மொத்தமா முடிச்சிட்டீங்களே எங்க கூட்டிட்டு போறீங்க" என கேட்க, அதற்கு குணசேகரன் "என்ன முடிந்தது? இன்னும் எதுவும் முடியல இப்பதான் முடிக்க போறேன், அதுக்காக தான் உன்னை கூட்டிட்டுப் போறான்" எனக் கூறுகின்றார். 


மறுபக்கம் நந்தினி "அப்பத்தா பற்றி வீட்டில் போனைப் போட்டு சொல்லிவிடலாம்" என சொல்ல ஜனனி எதுக்கு சொல்லணும்? அது சொல்லக்கூடாது அந்தாளு இங்க வரவே கூடாது என கோபப்படுகிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement