• Jul 24 2025

சுயநினைவுக்கு வந்த அப்பத்தா... ரேணுகாவை அடிக்கப் பாய்ந்த குணசேகரன்... உண்மையில் ஜீவானந்தம் யார்..? சூடு பிடிக்கும் 'Ethirneechal' promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியல் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொடராக அமைந்துள்ளது. காரணம் விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகளும் தான்.

இந்த சீரியலின் கதைப் பிரகாரம் தற்போது ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக ஜனனி அவரின் இடத்திற்குச் சென்றுள்ளார். அதேபோன்று ஜீவானந்தத்தை போட்டுத் தள்ளுவதற்காக கதிரும் சென்றுள்ளார்.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அப்பத்தா சுயநினைவுக்கு வந்து கண் முழித்து எழுந்து உட்கார்ந்திருக்கின்றார். இந்த சந்தோசமான விஷயத்தை நந்தினி ஈஸ்வரியிடம் கூறுகின்றார். 


இதனையடுத்து அங்கு வந்த குணசேகரன் அப்பத்தாவைப் பார்த்து "மகராசி மாதிரி நான் மதுரையில் வாழ்ந்தேன், என்னைப் பித்துப் பிடித்து பைத்தியம் பிடிச்சு அலைய வச்சிட்டாய் எல்லோ, இங்க பார் ஒற்றைக் கை விளங்காமல் போயிடிச்சு, எல்லாம் உன்னால் தான்" எனக் கூறி அப்பத்தாவை கண்டபாட்டிற்கு திட்டுகின்றார்.


பதிலுக்கு ரேணுகா "கை விளங்காமல் போகல, எல்லாம் நடிப்பு, சும்மா பொய் சொல்லிட்டு திரியாதீங்க" என்கிறார். இதனைக் கேட்டதும் கோபமடைந்த குணசேகரன் "எது பொய்யா ஏய்" எனக்கூறி ரேணுகாவை அடிக்கப் பாய்கின்றார். உடனே கரிகாலன் ஓடிவந்து அவரைத் தடுக்கின்றார். 


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. உண்மையில் இந்த ஜீவானந்தம் யார்..? அவருக்கும் அப்பத்தாவிற்கும் என்ன சம்மந்தம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement