• Jul 23 2025

திருமணத்திற்குப் பின்னர் ஹனிமூனுக்கு செல்ல முன்பே... அந்த விஷயத்தில் இறங்கவுள்ள ஹன்ஷிகா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகளின் திருமணம் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே இருக்கின்றது. அந்தவகையில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்ஷிகாவும் தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கின்றார்.


அதாவது ஹன்சிகா தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரைத் தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.


இந்நிலையில் இவர்களுடைய திருமணம்  இன்று மாலை ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடம் பழமை வாய்ந்த முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் மிகப் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இவருடைய திருமண சடங்குகள் தற்போது கோலாகலமாக ஆரம்பமாகி உள்ளது. 


இதனைத் தொடர்ந்து இவர்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல் ஒவ்வொன்றாக இணையத்தில் கசிந்த வண்ணம் தான் இருக்கு. அந்தவகையில் தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது திருமணத்தை முடித்ததும் ஹன்சிகா ஹனிமூனுக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகின்றது.


ஏனெனில் அவர் டிசம்பர் 6-ஆம் தேதி மும்பையில் நடக்கும் ஒரு விளம்பர படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கின்றாராம். அதனை தொடர்த்து அவர் மேலும் ஒரு சில ஷூட்டிங்கிலும் கலந்துகொள்ள இருக்கிறார். 

இதனால் டிசம்பரில் எல்லா ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு அதன் பிறகு தான் ஹன்சிகா கணவருடன் ஹனிமூன் செல்ல இருக்கிறார் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement