• Jul 24 2025

கணவனை வேறு அறையில் தூங்கச் சொல்லும் ஹன்ஷிகா... கல்யாணத்திற்குப் பின்னர் இப்படியும் நடக்கிறதா..? அவரே கூறிய உண்மை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்ஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்திருந்தார். அதாவது ஹன்சிகா தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரைத் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.


இந்நிலையில் இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடம் பழமை வாய்ந்த முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் இன்றுவரை சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தனக்கு ஹேண்ட்பேக்குகள் மேல் தீராத ஆசை இருப்பதாக கூறியுள்ளார். அதாவது "18 வயதில் இருந்து எனக்கு ஹேண்ட்பேகுகள் மீது ஆசை ஏற்பட்டது. என் முதல் ஹேண்ட்பேக் Louis Vuitton பிராண்ட். ரூ. 1 லட்சத்திற்கு கீழ் வாங்க நினைத்தேன். ஆனால் முடியவில்லை" என்றார்.


அத்தோடு "என் எல்.வி. பேக் எனக்கு மிகவும் ராசியானது. எங்கு சென்றாலும் அதைத்தான் நான் எடுத்துச் செல்வேன். என் அம்மா, சகோதரருக்கு பேக் மீது அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும். விலை உயர்ந்த ஹேண்ட்பேகுகளை வாங்குவது வீண் அல்ல அதை முதலீடாக மட்டுமே நான் பார்க்கிறேன். என் அனைத்து ஹேண்ட்பேகுகளும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பெறுமதி உள்ளது. 

அந்தவகையில் கடந்த ஆண்டு பாரீஸ் சென்றபோது வாங்கிய கெல்லி பேக் தான் தற்போது எனக்கு ரொம்பப் பிடித்த ஹேண்ட்பேக். நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் இதை எல்லாம் வாங்குகிறேன். நான் மீண்டும் பாரீஸ் செல்லவிருக்கிறேன். அதனால் மீண்டும் கெல்லி பேகை வாங்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.


அதுமட்டுமல்லாது "நான் சோஹைல் கதுரியாவுடன் டின்னருக்கு வெளியே சென்றால் இரண்டு சேர் அல்ல மூன்று சேர் இருக்கும் டேபிளை தான் நாங்கள் புக் செய்வோம். ஏனெனில் என் ஹேண்ட்பேகிற்கு என்று எப்பொழுதும் தனி சேர் ஒதுக்கிவிடுவேன். அந்த அளவுக்கு என் ஹேண்ட்பேகுகளை பொக்கிஷமாக நான் இதுவரை காலமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் நான் மும்பையில் இருந்து ஒரு நாளுக்கு மட்டும் வெளியூர் செல்வதாக இருந்தாலும் கூட என் படுக்கை முழுவதும் பேகுகளாக இருக்கும். அதனால் என் கணவர் என் படுக்கையில் இல்லாமல் வேறு அறையில் தூங்குவதையே நான் விரும்புவேன்" எனவும் அப்பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் ஹன்ஷிகா.

Advertisement

Advertisement