• Jul 26 2025

திருமணத்திற்கு தயாராகும் ஹன்சிகா.. கடைசியில் நடந்தது இது தான்..அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தன் நடிப்பால் பலரது மனதையையும் கட்டி போட்டவர் தான் நடிகை ஹன்சிகா.இவர்வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூர் கோட்டையில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். ஹன்சிகா சோஹேல் கத்தூரியா என்ற தொழிலதிபரை தான் காதல் திருமணம் செய்ய உள்ளார் என அறிவித்து இருந்தார்.

ஏற்கனவே விவாகரத்தான சோஹேல் கத்தூரியாவுடன் பல வருட நண்பர்களாக இருந்த ஹன்சிகா அதன் பின் காதலித்து தற்போது திருமணத்தையும் தனது ரசிகர்களுக்கு தெரிவித்து இருந்தார்.

திருமணத்திற்காக தற்போது பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறுஇருக்கையில் ஹன்சிகா ஏர்போர்ட்டில் தரையில் உட்கார்ந்தபடி பையை தேடும் புகைப்படம்  ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.



திருமண லெஹன்கா வாங்க காசு தேடிக்கொண்டிருப்பதாக அதில் குறிப்பிட்டு இருக்கிறார் ஹன்சிகா. அதனால் ஹன்சிகா மிகப்பெரிய தொகை அதற்காக செலவிடுகிறார் போல என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

அத்தோடு காசு அனுப்பவா என சிலர் கமெண்ட்டிலும் கேட்டு வருகின்றனர். ஜிபே நம்பர் சொல்லுங்க அனுப்புறோம் என சிலர் கேட்கவும் செய்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement