• Jul 23 2025

திருமணத்திற்கு பின்னான வாழ்க்கை பற்றி கூறிய ஹன்சிகா..என்ன மேடம் இப்படி சொல்லீட்டிங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஹன்சிகா மோத்வாணி அவரது காதலர் Sohael Khaturiyaவை கடந்த வருடம் டிசம்பர் 4ம் தேதி  பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.

மேலும் அவர்கள் திருமணம் மிக பிரம்மாண்டமாக ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் இடம்பெற்றது.

பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவது போல நான் செய்யமாட்டேன்.இதனைத் தொடர்ந்து நடிப்பேன் என ஹன்சிகா முன்பே கூறி இருந்தார்.


இவ்வாறுஇருக்கையில் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக இன்று ஹன்சிகா சென்னைக்கு வந்திருக்கிறார். தனது புது படத்தின் ஷூட்டிங்கிற்காக வந்திருப்பதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்கு சென்னையில் தான் இருக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார்.

அவர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்விக்கும் பதில் அளித்தார். திருமணத்திற்கு பின்னர் என்ன மாறி இருக்கிறது என கேட்டதற்கு, 'எதுவும் மாறவில்லை, என் கையில் ஒரு மோதிரம் வந்திருக்கிறது அவ்வளவு தான்' என ஹன்சிகா கூறி இருக்கிறார்.  


Advertisement

Advertisement