• Jul 25 2025

திருமணத்தின் போது கண்ணீர் வடித்த ஹன்சிகா- குழுமியிருந்து வாழ்த்துத் தெரிவித்த பிரபலங்கள்- இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஹன்சிகா.தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவரது நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இவ்வாறு படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் நேற்றைய தினம் மிகவும் பிரமாண்டமாக திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.இவர்களில் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற்றது.

 சோஹேல் கதுரியா சிந்தி பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். ஹன்சிகா திருமணத்திற்காக சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். அதே போல சோஹேலும் தங்க நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தார். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியாகி பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


திருமண விழாவில் முக்கியமான சடங்கான நெற்றியில் குங்குமம் வைக்கும் சடங்கின் போது, மகிழ்ச்சியில் ஹன்சிகா ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். இவர்களின் திருமணம் நடைபெறும் போது வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஹன்சிகாவும் சோஹேலும் கணவன் மனைவியாக திருமண பந்தத்தில் இணைந்து கைகளை பிடித்தபடி இருந்தனர்.

இந்த திருமணத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை குறிப்பிட்ட சில முக்கிய பிரபலங்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களது திருமண ஒளிப்பரப்பு உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement