• Jul 26 2025

இதுவரை எந்த ஹுரோயினும் செய்யாத விடயத்தை செய்த ஹன்சிகா- திருமணத்தில் ஹெஸ்டாக வந்தவர்கள் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஹன்சிகாவுக்கும், அவரின் காதலரும், பிசினஸ் பார்ட்னருமான சொஹைல் கதூரியாவுக்கும் டிசம்பர் 4ம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடந்தது. 

இவர்களின் திருமணம் ஜெய்பூர் அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 


இந்நிலையில் தான் ஹன்சிகா திருமணத்தில் யார் சிறப்பு விருந்தினர்கள் என்பது குறித்த தவல் வெளியாகியிருக்கிறது.அதாவது 10 சிறுவர், சிறுமிகளை தன் திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார். இது போன்ற பிரபலங்களின் பிரமாண்ட திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இதுவரை கிடைத்திராத அந்த குழந்தைகள் சந்தோஷப்பட்டார்கள்.

தன் திருமணத்திற்கு வந்த 10 சிறுவர், சிறுமியருக்கு வயிறு நிறைய சாப்பாடு கொடுத்ததுடன், அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ஹன்சிகா. அந்த புகைப்படங்களை பார்த்தவர்களால் ஹன்சிகாவைப் பாராட்டி வருகின்றனர்.


மேலும் ஹன்சிகா ஏற்கனவே ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். மேலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் உதவுகிறார். இந்நிலையில் அவர் தன் திருமணத்தன்று ஏழை குழந்தைகளை சிறப்பு விருந்தினர்களாக வரவழைத்து கவனித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement