• Jul 25 2025

ஹன்சிகாவின் காந்தாரி படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்தப் படத்தின் காப்பியா?- மோசமாக கலாய்த்து வரும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஹன்சிகா மோத்வாணி இரண்டு வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் காந்தாரி.த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில், மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், பிரிஜிதா, பவன், உள்பட பலர் நடித்துள்ளனர்.

 இப்படம் பிப்ரவரி 24ந் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்றைய தினம் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் தரைவிரி கோலத்துடன் ஹன்சிகா இருக்கிறார்.இணையத்தில் வைரலாகி வரும் இந்த போஸ்டரை பார்த்த நெட்டிசன்ஸ், இந்த போஸ்டரை பார்க்கும் போது காஞ்சனா பட போஸ்டரைப் பார்ப்பது போல இருப்பதாகவும், ஏற்கனவே காஞ்சனா ஒன்று, இரண்டு,மூன்று வெளியாகிவிட்டது.


 இது காஞ்சனா பகுதி நான்காவதா என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கிண்டலடித்து வருகின்றனர்.மேலும் ஹன்சிகா. இந்த மாதம்  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் அரண்மனையில் தனது காதலரான சோஹேல் கதுரியாவை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின்பும் ஹன்சிகா ஏராளமான படங்களில் கமிட்டாகி உள்ளார். பாட்னர், 105 மினிஸ்ட், மை நேம் ஸ் ஸ்ருதி, ரௌடி பேபி போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement