• Jul 25 2025

ஹன்சிகா திருமணம் முடிந்தது..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஹன்சிகா மோத்வானி தனுஷின் மாப்பிள்ளை படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் முதல் படமே இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து விஜய், சூர்யா, உதயநிதி, ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து சிறப்பான நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து அரண்மனை படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

எனினும் சமீபத்தில் இவரது நடிப்பில் மகா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தில் சிம்பு கேமியோ ரோலில் நடித்திருந்தார். சிம்புவுடன் ஹன்சிகா காதல் என்று முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர்களின் காதல் பிரேக் அப் ஆனது. மேலும்  இந்த பிரேக் அப்பிற்கு பிறகு மகா படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதனால் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆயினும் படம் சொதப்பியது.

இந்தப் படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. ஆயினும் பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாத நிலையில் தற்போது அவரது திருமணம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.தனது பிசினஸ் பார்ட்னர் சோஹைல் கத்தூரியாவுடன் திருமணம் இடம்பெற்றுள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருக்கும் கோட்டையில் நடந்த இந்த திருமணத்தில் ஹன்சிகாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே ஹன்சிகா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனத்திற்க்கு விற்றுவிட்டார் என செய்தி பரவிய நிலையில் தற்போது வரை திருமண போட்டோ வீடியோ எதுவும் வெளிவராமல் தான் இருந்தது.


இவ்வாறுஇருக்கையில் தற்போது ஹன்சிகா மற்றும் சோஹைல் இருவரும் திருமண கோலத்தில் ஜோடியாக நடந்து வரும் வீடியோ வெளியாகி இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருக்கிறது.

இதோ அந்த வீடியோ..




 

Advertisement

Advertisement