• Jul 24 2025

450 ஆண்டு பழமைவாய்ந்த அரண்மனையில் ஆரம்பமானது ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்..வைரலாகும் வீடியோ

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். மேலும் இவர் முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


மேலும் இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.

ஹன்சிகாவின் தாய்மொழி ஹிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். 


இந்நிலையில் இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். கடந்த மாதம் தனது வருங்கால கணவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஹன்சிகா. 


பாரிஸ் உள்ள ஈஃபில் டவர் முன் அவருடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமையான அரண்மனையில் நடைபெற உள்ளது.



அந்த வகையில் ஹன்சிகா -சோஹைல் கதூரியா ஜோடியின் மெஹந்தி விழா நேற்று நடைபெற்று உள்ளது. இதற்காக ஹன்சிகாவும், சோஹைலும் கையில் மருதாணி உடன் தயாராகும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement