• Jul 24 2025

Happy Independence Day - இந்திய தேசியகொடிக்கு மரியாதை செலுத்திய பாடகி சித்ரா..! வைரல் போட்டோஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மொழியை சிதைக்காமல், தெளிவான உச்சரிப்போடு, கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து உணர்வுபூர்வமாக பாடும் ஒரு சில பாடகியரில் ஒருவரும், தென்னகத்தின் “சின்னக்குயில்” அல்லது “கேரளத்தினின்டே வானம்பாடி” என்ற அடைமொழிக்கும் உரியவர் பின்னணிப் பாடகி சித்ரா .


 தந்தை கிருஷ்ணன் நாயர் வானொலி பாடகராகவும், தாயார் சாந்தகுமாரி சிறந்த வீணை இசைக் கலைஞராகவும் இருந்ததால், நல்ல இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த சித்ராவிற்கும், சிறுவயதிலேயே இசையின் மீது தாக்கம் அதிகமிருந்தது.

 பள்ளிப் பருவத்திலேயே பின்னணிப் பாடகர் கே ஜே ஏசுதாஸ் உடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்ற சித்ரா, 1979ஆம் ஆண்டு மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் எம் ஜி ராதாகிருஷ்ணன் மூலம் திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்று தனது திரையிசைப் பயணத்தை தொடங்கினார்.


தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஒன்பதாவது சீசனில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் சுதநதிர தினம் கொண்டாடி வரும் நிலையில் பாடகி சித்ரா இந்திய தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திம்  புகைப்படங்ளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement