• Jul 26 2025

ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டர் கணக்கு முடக்கம் .. நடந்தது என்ன? – அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். ‘மின்னலே’ படம் மூலம் அறிமுகமாகி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

மேலும் நூறுக்கும் மேற்பட்ட மற்ற இசையமைப்பாளர்களின் பாடலுக்கு இசைக்குழுவில் இருந்தவர். தன் கடின உழைப்பினாலும் நவீனத்தின் உச்சம் வரை சென்று தனித்துவமான பாடல்களை கொடுத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்து அவர்களால் ‘இசை மின்னல்’ என்றழைக்கப்படுகிறார். 

காதல் படம் என்றாலே அதில் ஹாரிஸ் என்ற பிம்பத்தை உருவாக்கியவர்.  ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, இளையராஜா என்று ஜாம்பவான்கள் இருந்த நேரத்திலே தன் தனித்துவமான இசையினால் அவர்களை முந்தி தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார். 

ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்களுடன் இணையத்தில் அவ்வப்போது கலந்துரையாடுவது அவர்களின் கேள்விக்கு பதிலளிப்பது மற்றும் அவர்களின் பதிவுகளை லைக் செய்வது என்று இருப்பவர். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு கடந்த இரண்டு நாட்களாக சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அது சரி செய்து வருவேன் என்றும் ஹாரிஸ் ஜெயராஜின் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து அந்த பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement