• Jul 23 2025

அடடே நடிகர் சூரி இப்படியொரு சீரியலில் நடித்திருக்கின்றாரா?- அதுவும் விஜய்யின் நண்பனுடனா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ஆரம்ப காலம் முதல் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் கடந்த 2007ம் ஆண்டு துவங்கி, 2013ம் ஆண்டு நிறைவு பெற்ற சீரியல் தான் திருமதி செல்வம்.


இந்த சீரியலில் சஞ்சீவ், அபிதா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இந்த சீரியல் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.மேலும் வடிவுக்கரசி, ஏ. ஈ. மனோகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். 


அந்த வரிசையில் பிரபல வெள்ளித்திரையின் முன்னணி நட்சத்திரம் பரோட்டா சூரியும் இந்த சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருமதி செல்வம் செல்வம் சீரியலில் நடிகர் சூரி மெக்கானிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த காட்சியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் சூரி தனது விடா முயற்சியினால் வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராக மட்டுமல்லாது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இதனால் ரசிகர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement