• Jul 25 2025

தனுஷை நிரந்தரமாகப் பிரிய ஐஸ்வர்யா முடிவெடுத்து விட்டாரா..? நீதிமன்றத்தில் விவாகரத்துப் பதிவு.. வெளியான பரபரப்புத் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

2002-ஆம் ஆண்டிலிருந்து ஒருவரையொருவர் காதலித்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் இணைந்தனர். குறிப்பாக 18 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் திடீரென பிரிவதாக கடந்தாண்டு அறிவித்தனர்.  


இதனையடுத்து இவர்களின் பிரிவு திரையுலகில் மட்டுமன்றி ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியது. இதனால் பலரும் இவர்களின் பிரிவிற்கு பல காரணங்களை கூறி வந்தனர். இருப்பினும் தங்களுடைய பிரிவிற்கு பிறகு தனித்தனியாக வாழ்ந்து வரும் இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக வருகின்றார்கள். 


நாட்கள் நகர்ந்தாலும் இவர்களின் பிரிவுக்கான உண்மைக் காரணம் என்னவாக இருக்கும் என்று யாராலும் இன்றுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. குறிப்பாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவிற்கான பல காரணங்களை பலரும் சொல்ல, அதில் முக்கிய காரணமாக கூறப்படுவது தனுஷ் மற்ற ஹீரோயின்களுடன் காட்டிய நெருக்கம் தான் என ஒரு சிலர் கூறுகின்றனர். 


அதாவது படத்தில் நெருக்கமான காட்சிகளில் தனுஷ் நடிப்பது ஐஸ்வர்யாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பதாலும், அதன் காரணமாக பல பிரச்சனைகள் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா சிவில் நீதிமன்றத்தில் முறையான விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக ட்விட்டர் பிரபலமும், சினிமா விமர்சகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்து ட்விட்டர் பக்கத்தின் மூலம் கூறியுள்ளார். 


மேலும் இப்பதிவில் தனுஷ் வேறொரு பெண்ணுக்காக ஐஸ்வர்யாவை ஏமாற்றியதன் காரணமாகத்தான் இந்த விவாகரத்து நடைபெறுகின்றது என்ற பரபரப்பான செய்தியையும் வெளியிட்டுள்ளார் உமர் சந்து. ஆனால் இந்த செய்தி எந்தளவிற்கு உண்மையாக இருக்கும் என்பது தெரியவில்லை. 

அதாவது சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணையப்போவதாக ஒரு சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது ஐஸ்வர்யா தனுஷிடமிருந்து நிரந்தரமாக பிரிவதற்காக விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எனவே உண்மை நிலவரம் என்ன என்பது இருதரப்பில் இருந்து வெளிவரும் அறிவிப்பில் தான் தெரியும்.

Advertisement

Advertisement