• Jul 23 2025

கைப்பிள்ளை bgm ah எடுத்து அனிரூத் போட்டிருக்கின்றாரா?- லியோ படத்தின் செக்கண்ட் சிங்கிளை கலாய்த்து வரும் ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள லியோ படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்கும் அளவில் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

 கடந்த வாரம் லியோ படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகின. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த போஸ்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து லியோ செகண்ட் சிங்கிள் அல்லது இசை வெளியீட்டு விழாவுக்கான அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 


ஆனால் படக்குழு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தாலும், இந்த வாரம் 30ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்பட்டது. இருப்பினும் அதிகளவில் டிக்கெட் பாஸ்கள் கேட்டு விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் நடந்துவிடக் கூடாது என ரத்து செய்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.


இதனால் லியோ படத்தின் செக்கண்ட் சிங்கிள் ப்ரோமோ நேற்று நள்ளிரவு வெளியான நிலையில், அந்த பாடலின் பிஜிஎம் வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு போடப்பட்ட ட்யூன் போல இருப்பதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் .



Advertisement

Advertisement