• Jul 25 2025

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் இத்தனை பாடல்கள் பாடி இருக்கின்றாரா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் மாகாபா ஆனந்த்.ரேடியோ ஜாக்கியில் பணிபுரியும் போதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.இதனைத் தொடர்ந்தே விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருகின்றார்.

சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது எது இது’ ஷோ  தான் இவர் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி.  தற்பொழுது சூப்பர் சிங்கர், அண்டாகாகசம், ஊ சொல்லுறியா ஊஊ சொல்லுறியா போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ப்ரியங்காவுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. இந்த நிலையில் மாகாபா ஆனந்த்  சூப்பர் சிங்கர் மேடையிலும் பல பாடல்களைப் பாடி அசத்தியிருக்கின்றார்.


இந்த நிலையில் சினிமாவிலும் மாகாபாஆனந்த் ஒரு சில பாடல்களை பாடியிருக்கிறாராம்.‘கடல்’ என்ற படத்தில் ஆயாவ காணோம், ‘மாணிக்’ என்ற படத்தில் மாமா மருகயா, ‘பட்டிபுலம்’ என்ற படத்தில் லவ் பண்ணுங்க , ‘காட்டுப் புறா’ என்ற படத்தில் உயிரே என் உயிரே போன்ற பாடல்களை மாகாபா ஆனந்த் தான் பாடியிருக்கிறாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement