• Jul 25 2025

அடடே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் பிள்ளைகள் அதற்குள் இவ்வளவு பெருசா வளர்ந்திட்டாங்களா?- வெளியாகிய லேட்டஸ்ட் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா.இவர் நானும் ரௌடி தான் என்னும் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி,விக்னேஷ் சிவனைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும், தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.


தங்களுடைய குழந்தைகளுக்கு உயிர் - உலகம் என வித்தியாசமான பெயர் சூட்டி உள்ள இருவரும், இன்று தங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள் இருப்பதால்,   நயன்தாராவின் பிறந்தநாளை கூட வெளிநாட்டில் கொண்டாடாமல், தங்களுடைய சென்னையில் உள்ள வீட்டிலேயே கொண்டாடிய இந்த ஜோடி, தற்போது திருமண நாளையும் அதேபோல் வீட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.


நேற்று இரவே நயன்தாராவுக்கு வாழ்த்து கூறி விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்கள் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட நிலையில், இதைத்தொடர்ந்து உயிர் - உலகம் இருவரும் தங்களுடைய பெற்றோரான, நயன் - விக்கிக்கு வாழ்த்து கூறும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 


 இந்தப் புகைப்படத்தில் உயிர் - உலகம் இருவரும் திரும்பி நிற்பது போல் உள்ளது. மேலும் அதற்குள் இவ்வளவு பெருசா நயன் விக்கியின் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களா? என ரசிகர்கள் பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement