• Jul 26 2025

ரஞ்சிதமே பாடல் பாடிய மானசியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குநர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் முதல் பாடல் ப்ரமோ ஒன்று வெளியானது. ரஞ்சிதமே என்று துவங்கும் இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். இந்த பாடல் நவம்பர் 5ஆம் தேதி மாலை 6 மணியளவில் வெளியானது. ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் விஜய் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது. 

இந்த பாடலில் பாடகி மானசியும் பாடி இருக்கிறார். வெள்ளை ஆடையில் கையில் கரும்புடன் மானசி அந்த பாடலில் பாடி இருக்கிறார். அத்தோடு இவர் ஒரு இந்துஸ்தானி பிண்ணணி பாடகியாவார். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் சுமார் 170 பாடல்களை பாடி  உள்ளார். 2013 ஆம் ஆண்டில் தெலுங்கு மொழி படத்தின் மூலம் தான் மானசி சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி திரைப்படத்தில் பாடலை பாடியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி அசத்தியிருக்கிறார். மேலும் இவர் பாடகி மட்டுமில்லாமல் நடிகைகளுக்கு பிண்ணணிக் குரலும் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் இதுவரை 35க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் பாடகியும், டப்பிங் கலைஞருமான MM மானசியின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..







Advertisement

Advertisement