• Jul 25 2025

பாடகி சின்மயின் இரட்டைக் குழந்தைகளையும் பார்த்திருக்கின்றீர்களா?- முதன் முறையாக அவரே வெளியிட்ட போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பின்னணி  பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் பிரபலமானவர் சின்மயி ஸ்ரீபாதா. அதைவிட இவருக்கு பிரபலம் கொடுத்தது வைரமுத்து மீது இவர் கொடுத்த மீடு புகார் தான். அதேபோல மீடு புகார் கொடுத்ததோடு அவ்வாறு புகார் கொடுப்பவர்களுக்கும் உறுதுணையாக நின்று வருகிறார் சின்மயி. 


 அவ்வப்போது சமூக வலைதளத்தையும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து பிரபலமானவர் இவர்.சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் சின்மயி, சமீபத்தில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக செய்தி வெளியிட்டு இருந்தார். 


இவர்  நடிகர் ராகுல் ரவீந்திரன் இருவரும் 2014ல் திருமணம் செய்துகொண்டார்.இருப்பினும் கடந்த வருடம் தான் இவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்திருப்பதாக கடந்த வருடம் அறிவித்த போது, வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றீர்களா என பலரும் கேள்வி எழுப்பினார்கள். 


அதற்கு பிறகு தான் தான் கர்ப்பமாக இருந்த போட்டோக்களை சின்மயி வெளியிட்டார்.இதுவரை சின்மயி குழந்தைகள் போட்டோவை வெளியிடாமலேயே இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக இரட்டை குழந்தைகளின் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.இந்தப் போட்டோக்கள் வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement