• Jul 24 2025

டாடா பட நடிகர் கவினின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? இணையத்தில் வைரலாகி வரும் குடும்பப் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின், தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 


தொடர்ந்து இந்த நிகழ்வில் சூப்பராக விளையாடி வந்த இவர் 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன்  வெளியேறினார்.டைட்டில் வின் பண்ணுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பணப்பெட்டியுடன் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.


பின்னர் படவாய்ப்புக்களைப் பெற்று நடித்து வரும் இவர் கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகின்றார்.அந்த வகையில் முதலில் வெளியாகிய லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.தொடர்ந்து ஒரு வருட இடைவெளியின் பின்னர் டாடா என்னும் படம் வெளியாகியிருந்தது.


இப்படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமல் ஹாசன் கூட படக்குழுவை கூப்பிட்டு பாராட்டி இருந்தார்.இந்நிலையில், கவின் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.









Advertisement

Advertisement