• Jul 25 2025

செய்தி வாசிப்பாளர் கண்மணியின் தம்பியைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே இவர் தான் சகோதரனா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தான் நியூஸ் ரீடர் கண்மணி. இவர் முதன் முதலில் ஜெயா டிவியில் தான் முதன் ரீடராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நியூஸ்18, காவிரி போன்ற பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருந்தார்.

தற்போது இவர் சன் டிவியில் நியூஸ் ரீடர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் அணிந்து வரும் சேலை, ஹேர் ஸ்டைலுக்கு என்றே பெண் ரசிகைகளும் உள்ளார்கள். இவருக்கு சீரியலிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு வந்தது.ஆனால், இவர் தன்னுடைய நியூஸ் கேரியரில் தான் கவனம் செலுத்துவேன், நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம்.


இப்படி ஒரு நிலையில் கண்மணி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகன் நவீனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நவீன் சின்னத்திரை வருவதற்கு முன்பே நடிகர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.


இவர்களுக்கு அண்மையில் பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் நவீன் கண்மணி இருவரும் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் கண்மணி தன்னுடைய உடன்பிறந்த சகோதரனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அடடே இவர் தான் உங்க சகோதரனா என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement