• Jul 25 2025

எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனின் மகள் மற்றும் மகனை பார்த்தீர்களா?-முதன் முறையாக வெளியான குடும்ப புகைப்படம்…

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு இயக்குநராகவும் வலம் வருபவர் தான் நடிகர் மாரிமுத்து.இவர் நடிக்க முதல் மணிரத்னம், வசந்த், சீமான் மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் உதவி இயக்குநராகப் பணியைத் தொடர்ந்தார்.


பிரசன்னா மற்றும் உதயதாரா நடித்த காதல் திரைப்படமான கண்ணும் கண்ணும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை, ஆனால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இது நாள் வரைக்கும் ஒரு காமெடி காட்சிகளில் நடிகர் மாரிமுத்து நடித்து யாருமே பார்த்ததே இல்லை, முக்கியமாக இவர் சிரித்தே யாரும் பார்த்திருக்க முடியாது.


நடிகர் மாரிமுத்து மிஷ்கின்  இயக்கத்தில் வெளியான  யுத்தம் செய் என்னும் படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமாகினார்.அங்கு அவர் ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரியாக நடித்தார்.தொடர்ந்து ஆரோகணம், நிமிர்ந்து நில் மற்றும் கொம்பன் உள்ளிட்ட  பல படங்களில் நடித்திருக்கின்றார்.


 அடிக்கடி போலீஸ் அதிகாரியாக நடித்தார். மருதுவில் அவரது நடிப்பு விஷாலை கத்தி சண்டையில் நடிக்க ஒப்பந்தம் செய்யத் தூண்டியது.இது ஒரு புறம் இருக்க சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்னும் சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


அந்த வகையில் தற்போது முதன் முறையாக தன் மனைவி மற்றுமன் மகன் மற்றும் மகள் என்று அனைவருடனும் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதழன ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement