• Jul 25 2025

பிரமாண்டமாக தனுஷ் கட்டிய புதிய வீட்டின் வெளிப்புறத்தோற்றத்தை பார்த்திருக்கின்றீர்களா?- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் திறமையான நடிகர் என பெயர் எடுத்ததோடு 2 முறை தேசிய விருதையும் பெற்றுள்ளவர் நடிகர் தனுஷ். வயதானவர் தோற்றத்தில் நடிக்க பல நடிகர்கள் தயங்கும் நிலையில், மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக 'அசுரன்' படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார் .


 குறிப்பாக சில படங்களில், தனுஷை தவிர மற்ற நடிகர்களை கற்பனை கூட செய்து முடியாது என்றும் ரசிகர்கள் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் திறமை கொண்டவர்.


மேலும், சமீபத்தில்... தன்னுடைய அப்பா - அம்மாவுக்காக தனுஷ் போயஸ் தோட்டத்தில் கட்டியுள்ள வீட்டில், எளிமையான முறையில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறியுள்ளார்.


வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம், விளையாடுவதற்கு இடம், ஹாம் தியேட்டர் என பல விஷயங்களை வைத்து இந்த வீட்டை கட்டியுள்ளாராம் தனுஷ்.வீட்டின் கிரகபிரவேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில வெளிந்த நிலையில் தற்போது வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.


தனுஷ் கட்டியுள்ள வீடு வெளியே இருந்து பார்ப்பதற்கே மிக பிரம்மாண்டமாக கண்களுக்கு தெரிகிறது.இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.





Advertisement

Advertisement