• Jul 25 2025

பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 இன் முதல் வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- வெளியாகிய கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சற்று முன் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்ள பிக் பாஸ் பிரியர்கள் அனைவரும் ஆவலுடன் தொலைக்காட்சி முன் அமர்ந்து இருக்கின்றனர்.


எப்போதும் ஒரு வீட்டில் நடக்கும் பிக்பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கப்போகிறது. இரண்டு வீடுகளில் பிக்பாஸ் போட்டி எப்படி நடைபெறும்; ஏதேனும் ரூல்ஸ் மாறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.


போட்டியாளர்களாக மொத்தம் 18 பேர் முதல் நாளிலேயே உள்ளே செல்ல உள்ளனர் என்றும் மேலும், சிலர் வைல்டு கார்டு என்ட்ரியாக வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வகையில் தற்பொழுது முதலாவது போட்டியாளராக நடிகர் கூல் சுரேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார்.


 அப்போது கமல்ஹாசன் அவருக்கு சுரேஷ் என்று பெயர் பொறிக்கப்பட்ட செயின் ஒன்றையும் வழங்கி உங்க முகத்தையும் மக்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 7 இன் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement