• Jul 25 2025

வனிதா தோளில் கை போட்டு போஸ் கொடுத்த அசீம்- வெளியாகிய லேட்டஸ்ட் போட்டோவைப் பார்த்தீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் என்றால் அது 6வது சீசன் தான்.இதன்  கிராண்ட் ஃபினாலே கடந்த ஜனவரி 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் மூவரில் யார் வெற்றி பெறுவார்கள் என பெரிய எதிர்பார்ப்பே நிலவியது.

 விக்ரமனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எல்லாம் சப்போர்ட் செய்த நிலையில், விக்ரமன் தான் வின் பண்ணுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அசீம் டைட்டிலை தட்டித் தூக்கினார்.இதுவரை இல்லாத அளவுக்கு அசீமுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுடன் சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கி விஜய் டிவி வேறலெவலில் அசீமின் வெற்றியை கொண்டாடியது. 


ஆனால், விக்ரமன் வெற்றி பெறவில்லை என்கிற விரக்தியால் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் அசீமின் வெற்றியை பெரியளவில் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.விக்ரமனுக்கு திருமாவளவன் டுவிட் போட்டு வாக்கு சேகரித்த நிலையில், உடனடியாக அதை கடுமையாக எதிர்த்தது வனிதா மற்றும் பிரசாந்த் ரங்கசாமி தான். 


இருவரும் அசீமுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பிய நிலையில், தற்போது வனிதா விஜயகுமாரை சந்தித்து அசீம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளன.

நாங்க இங்க உதாரணங்களாக வாழ விரும்பவில்லை. இங்கே இருக்கக் கூடிய ரூல்களை பிரேக் பண்றவங்க என அசீம் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது முழு ஆதரவையும் தெரிவித்து இருக்கிறார் வனிதா விஜயகுமார்.


வனிதா விஜயகுமார் மற்றும் சில நண்பர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் புகைப்படங்கள் எடுத்து கொண்ட போது, வனிதா விஜயகுமாரின் மகளும் அசீம் உடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த போட்டோக்களை பார்த்த அசீம் ரசிகர்கள் லைக் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement