• Jul 25 2025

நடிகர் விஜய்யின் அப்பா அம்மா காதலிக்கும் போது எடுத்த புகைப்படத்தை பார்த்திருக்கின்றீர்களா?- லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய்க்கு என்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. இதனால் அடுத்த சூப்பர் ஸ்டாரை் இவர் தான் என பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர். இதனால் அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதலும் ஏற்பட்டு வருகின்றது.

இருப்பினும் விஜய் தன்னை நோக்கி வரும் விமர்னங்களை கண்டு கொள்ளாது தன்னுடைய நடிப்பில் கவனமாக இருந்து வருகின்றார். இவருடைய தந்தை தான் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தற்போதும் சினிமாவில் ஆக்டிவாக படங்கள் இயக்கி வருகிறார்.


சமீபத்தில் அவர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை என்ற படம் திரைக்கு வந்திருந்தது. அதில் சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடித்து இருந்தார்.விஜய் மற்றும் எஸ்ஏசி இடையே சமீபத்திய வருடங்களாக பிரச்சனை இருந்து வரும் நிலையில் அவர்கள் பேச்சுவார்த்தையில் இல்லை என கூறப்படுகிறது. 


அது பற்றி பேட்டிகளில் பேசும் எஸ்ஏசி, 'இது வழக்கமாக எல்லா அப்பா - மகன் இடையே வரும் பிரச்சனை போல தான்' என கூறி வருகிறார்.தற்போது எஸ்ஏசி அவரது மனைவி ஷோபா உடன் காதலில் இருக்கும் போது எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.இன்று காதலர் தினம் என்பதால் அவர் தனது பழைய நினைவுகளை  டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement