• Jul 25 2025

விஜய் டிவியின் மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் குடும்பத்தைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் விஜய்டிவி முதலிடம் வகிக்கின்றது. இதுவரை கலக்கப் போவது யாரு, கலக்கப் போவது யாரு சம்பியன் , காமெடி ராஜா கலக்கல் ராணி போன்றன காமெடியை மையப்படுத்தியே உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியாகும். 

இது தவிர தற்பொழுது குக்வித் கோமாளி ராஜு வீட்டில பாட்ரி போன்ற நிகழ்ச்சிகளும் காமெடி நிகழ்ச்சிகளாகவே பார்க்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வாறான காமெடி நிகழ்சிகளில் பங்கேற்று பிரபல்யமானவர் தான் வடிவேல் பாலாஜி.தனது நகைச்சுவையால் பலருடைய மனதில் இருந்து துன்பத்தை நீக்கிய நகைச்சுவை கலைஞர்களில் இவரும் ஒருவர்.


மேலும் வடிவேல் பாலாஜி கடந்த செப்டம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் திரையுலகினர் உட்பட பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

நடிகர் வடிவேல் பாலாஜியின் மனைவி ஜோதி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு பின், அவருடைய பிள்ளைகளின் படிப்பு செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொள்ளவது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், நடிகர் வடிவேல் பாலாஜி தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றது.


Advertisement

Advertisement