• Jul 24 2025

குடும்பத்தில் பிள்ளை மனைவி என்றாலே பிரச்சனை தான்- மனம் நொந்து பேசிய விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் தான் விஜய். இவரது நடிப்பில் வாரிசு என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்திற்கு வெளியாகவுள்ளது. இப்படத்திலிருந்து பெஸ்ட் சிங்கிள் பாடல் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

இதனை அடுத்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணியில் இயக்குநர் மிகவும் வேகமாக ஈடுபட்டு வருகின்றார். இது தவிர விஜய் தனிப்பட்ட வாழ்க்கையில் தனது  தந்தை எஸ் ஏ சந்திரசேகருமன் மோதலில் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.


 குறிப்பாக விஜய் பெயரில் அவர் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சம்மந்தமாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே வேறுபட்ட கருத்துகள் எழுந்ததும், எஸ் ஏ சி தன் கருத்தை விஜய் மேல் திணிப்பதுமே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பாக தொடங்கப்படட் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் “குடும்பத்தில் பிள்ளை மனைவி என்றாலே பிரச்சனை இருக்கும். அதனை சமாளிப்பதே கடினமானது” என பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு விஜய்யைதான் மறைமுகமாக குறிப்பிடுவது போல உள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement