• Jul 25 2025

அவரால் ஐந்து நிமிடத்திற்கு மேல் இருக்க முடியாது . அப்படிப்பட்ட இவருக்கு பிக்பாஸ் வீடு சுத்தமாக செட் ஆகாது. - நடிகை ரேகா நாயர் கூறும் பிக்பாஸ் பவாவின் சீக்ரெட் இதோ!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இம் முறையும் கோலாகலமாகஆரம்பிக்கப்படிருந்தது.  இவ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில்  ஒரு வாரம் தாக்குப் பிடித்த பவா செல்லத்துரை அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார். இதற்கு காரணம் அவரது உடல்நிலை .


அது ஒருபுறம் இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் நடப்பது எதுவுமே அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது கமல் இவரை புகழ்ந்து தள்ளினார்.  கமல் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற  வேண்டும் என்று பிக்பாஸ் வீட்டில் இருந்த பவா போட்டியாளர்களிடம் ஒவ்வொரு நாளும் கதை சொன்னார். ஆனால் அந்த கதை எல்லாம் போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. அதை வைத்து நிறைய சர்ச்சைகளை கிளப்பினார்கள்.தன்னுடைய டார்க் சைடு என்ன என்பதை தெரிந்து கொள்ளத்தான் பவா செல்லத்துரை பிக்பாஸ் வந்தார் ஆனால் அவரால் ஒரு வாரத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை.


பவாவினை பற்றிய சீக்ரெட்டான விஷயங்களை இரவின் நிழல் நடிகை ரேகா நாயர்  பேட்டி ஒன்றிலே போட்டு உடைத்திருக்கின்றார். பவா முதலமைச்சருடன் மட்டுமல்ல எல்லா அமைச்சர்களுடனும் உடகாந்து பேசுவதை ரேகா பார்த்திருக்கிறாராம். ஆனால் அவர் ஒரு ஐந்து நமிடத்துக்கு மேல் இருக்க மாட்டாராம், தம் அடிப்பாராம், வெளியே அவருடன் வரும் நண்பர்களுடன் பேசணும், இந் நிகழ்ச்சி எப்போது முடியும் என பரபரப்பாக இருப்பவர். ஒரு மணித்தியாலய கதைக்கு ஒரு லட்சம் கொடுத்து அழைத்தாலும் ஒரு கதையை சொல்ல முதல் பேசும் வாய்ப்பு கிடைத்தால் கூட அவரால் ஐந்து நிமிடத்திற்கு மேல் இருக்க முடியாதாம். அப்படிப்பட்ட இவருக்கு பிக்பாஸ் வீடு சுத்தமாக செட் ஆகாது. என கூறியிருக்கின்றார்.
 

Advertisement

Advertisement