• Jul 26 2025

ஹீரோ அழைத்த நேரத்திற்கு வீட்டிற்கு செல்லவில்லை- சிம்பு பட நடிகை திடுக் தகவல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் ஹீரோ அழைத்த நேரத்திற்கு அவர் வீட்டிற்கு செல்லவில்லை என்றால் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.

ஹீரோ அழைத்த உடன் அவர் வீட்டிற்கு செல்லாவிட்டால் படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்கிறார் மல்லிகா ஷெராவத்.

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது பாலிவுட்டில் இருப்பதாக சில பிரபல நடிகைகளே கூறியுள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட்டில் நடப்பது குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் மல்லிகா ஷெராவத். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மல்லிகா கூறியிருக்கும் விஷயம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அண்மையில் பேட்டி ஒன்றில் மல்லிகா தெரிவித்திருப்பதாவது, நான் அட்ஜஸ்ட் பண்ணாததால் ஏ லிஸ்ட் ஹீரோக்கள் யாரும் என்னுடன் நடிக்க மறுத்துவிட்டார்கள். தங்கள் கட்டுப்பாட்டில், தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணும் நடிகைகளை தான் அவர்களுக்கு பிடிக்கும். எனக்கு அது பிடிக்காது என்றார்.

மல்லிகா ஷெராவத் மேலும் கூறியதாவது, உட்காரு, எழு என்று ஹீரோ என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். காலை 3 மணிக்கு ஹீரோ போன் செய்து என் வீட்டிற்கு வா என்றால் உடனே செல்ல வேண்டும். மேலும் அதை செய்தால் படம் கிடைக்கும். ஹீரோ அழைத்ததும் செல்லாவிட்டால் படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்றார்.

அத்தோடு இந்தி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டீர்களே என்று மல்லிகாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, நான் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்ய முயற்சி செய்தேன். அனைவரையும் போன்று நானும் சில தவறுகள் செய்தேன். சில கதாபாத்திரங்கள் நல்லதாக இருந்தன, சில இல்லை. ஆனால் என் திரைப்பயணம் சிறப்பானது என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement