• Jul 26 2025

“3-வது சந்திப்பிலேயே என்னை பலவந்தமாக கற்பழித்தார்....” இயக்குநர் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு... பரபரப்பில் திரையுலகம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் தன்னை சந்தித்த மூன்றாவது மீட்டிங்கிலேயே தன்னை பலவந்தமாக கற்பழித்ததாக பாலிவுட் நடிகை பாயல் கோஷ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அனுராக் கஷ்யப். இவர் தமிழிலும் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.அத்தோடு  இவர்மீது தற்போது பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் கொடுத்துள்ள மீடூ புகார் தான் பாலிவுட் வட்டாரத்தில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் பாயல் கோஷ், தமிழிலும் தேரோடும் வீதியிலே என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.


அத்தோடு இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தான் தற்போது பாலிவுட்டில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் கூறி உள்ளதாவது : “தென்னிந்தியாவில் 2 தேசிய விருது வாங்கிய இயக்குநர்கள் மற்றும் நட்சத்திர இயக்குநர்களுடனெல்லாம் பணியாற்றி உள்ளேன். ஆனால் இதுவரை யாரும் என்னை தொட்டு கூட பேசியதில்லை. ஆனால் பாலிவுட்டில் அனுராக் கஷ்யப் உடன் நான் ஒரு படத்தில் கூட பணியாற்றவில்லை.

ஆனால் அவர் என்னை சந்தித்த மூன்றாவது மீட்டிங்கிலேயே என்னை பலவந்தமாக கற்பழித்தார். நடிகை பாயல் கோஷின் இந்த புகார் தான் பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நடிகை பாயல் கோஷ் இயக்குநர் அனுராக் கஷ்யப் மீது புகார் கூறுவது இது முதன்முறை அல்ல. எனினும் இதற்கு முன் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது அது அனைத்தும் பொய் என மறுப்பு தெரிவித்திருந்தார் அனுராக் கஷ்யப்.


எனினும் அதுமட்டுமின்றி பாலிவுட் நடிகைகள் டாப்ஸி உள்ளிட்ட பிரபலங்களும் அந்த சமயத்தில் அனுராக் கஷ்யப்பிற்கு ஆதரவுக்கரம் நீட்டி இருந்தனர். எனினும் இதையடுத்து தற்போது மீண்டும் அவர்மீது பாயல் கோஷ் வைத்துள்ள குற்றச்சாட்டு பேசுபொருள் ஆகியுள்ளது. ஏற்கனவே தான் திடீரென தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலோ அதற்கு இவர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து பாயல் கோஷ் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement