• Jul 25 2025

'சந்திரமுகி 2' வில் வேட்டையனாக நடிப்பது யார் தெரியுமா..? இணையத்தில் கசிந்த புகைப்படம்.. அதிர்ச்சியில் படக்குழு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'சந்திரமுகி'. இப்படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு எனப் பலரும் நடித்திருந்தனர். மேலும் இப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.


இதனையடுத்து தற்போது இதன் 2-ஆம் பாகம் தயாராகி வருகின்றது. இது குறித்த அப்டேட்டுகள் அடிக்கடி வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து, கங்கனா ராகவா லாரன்ஸுடன் இருந்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.


இதனைத் தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 வில் ராகவா மற்றும் கங்கனாவின் மற்றுமோர் லுக் கசிந்துள்ளது. இதனால் படக்குழு பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில் இருக்கும் ராகவா வேட்டையன் கதாபாத்திரத்திலும், மற்றும் கங்கனா சந்திரமுகி கதாபாத்திரத்திலும் நடிப்பதாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


எனவே இதனை வைத்துப் பார்க்கும் போது 'சந்திரமுகி 2' என்பது சந்திரமுகி முதல் பாகத்தின் ஃப்ளாஷ்-பேக்காக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement