• Jul 25 2025

பான் இந்திய ஸ்டார் என்றால் அவர் மட்டும் தான்- பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய நடிகர் சித்தார்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் புது காதல் ஜோடியாக மாறியுள்ள, சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும், தற்போது வரை வெளிப்படையாக இருவரும் காதலித்து வரும் தகவலை வெளிப்படுத்தவில்லை என்றாலும், தங்களை பற்றி வெளிவரும் காதல் கிசுகிசுவை கண்டு கொள்ளாமல், பொது இடங்களில் அடிக்கடி ஜோடியாக வலம் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

சமீபத்தில் கூட, பிரபல நடிகர் சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். 

முன்பை விட இருவரும் அடிக்கடி, பொது இடங்களில் சேர்ந்து காணப்படுவதால்... விரைவில் இந்த ஜோடி தங்களின் திருமணம் குறித்த தகவலையும் வெளியிட வாய்ப்புள்ளதாக இந்தி மீடியாக்களில் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 


இது இவ்வாறு இருக்க இருவரும் கெரியரிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் சித்தார்த் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் பான் இந்திய ஸ்டார் என்றால் அது கமல்ஹாசன் மட்டும் தான். எந்த இடத்தில கொண்டு போய் விட்டாலும் அந்த இடத்திற்கு ஏற்றமாதிரி தன்னை மாற்றிக் கொள்வார்.

அவரை மாதிரி யாருமே இல்லை. பஞ்ச தந்திரம் படத்தில அவர் 4 மொழிகளில் பேசி இருப்பாரு.அந்த சீன்ல உணர்ச்சிப் பூர்வமாக நடிக்கிற மாதிரியே தெரியாது. அப்பிடி அந்த மொழிக்காரங்க மாதிரியே பேசி இருப்பாரு.என பெருமையாக பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement