• Jul 26 2025

குழந்தைகளுடன் வீடு திரும்பிய நிலையில் ரம்பாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி-சோகத்தில் அவர் இட்ட பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரம்பாவின் கார் விபத்துக்குள்ளானதால் அவரது கடைசி மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் 90களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா . இவர் விஜய், அஜித், கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, உச்ச கட்ட நாயகிகளில் ஒருவராக இருந்தவர்.

மேலும் ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரஜித் என்கிற இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின், இவர்களுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடு வந்தாலும், அவை அனைத்தையும் மீறி இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

 திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டாமல் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு தற்பொழுது இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளதும் தெரிந்ததே.

இவ்வாறுஇருக்கையில் பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து செல்லும் வேளை ரம்பாவின் கார் இன்னொரு காருடன் மோதியதில் சிறுகாயங்களுடன் இரண்டு குழந்தைகளும் தப்பிய நிலையில் ரம்பாவின் கடைசி மகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு..



Advertisement

Advertisement