• Jul 26 2025

'வீட்டை விட்டு போக சொல்லி மிரட்டுகிறார் '; 'என் உயிர் போனால் அவர் தான் காரணம்'.. பிக் பாஸ் சரவணன் மீது மனைவி பரபரப்பு புகார்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

90 களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சரவணன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது சரவணன் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சரவணன் மீது அவரது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், பருத்திவீரன் படத்தில் முன்பு வரை சரவணன் பிச்சை எடுக்கிற நிலையில் தான் இருந்தார். நான் தான் அவருக்கு உணவு அளித்தேன்.

தற்போது நான் சொந்த காசில் கட்டிய வீட்டில் இருந்து வெளியேறும் படி மிரட்டுகிறார்.மேலும் கொலை மிரட்டல் அதிகமாக வருகிறது. என் உயிருக்கு அவர் தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்த இவரின் புகார் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.  

Advertisement

Advertisement