• Jul 23 2025

'அவரே உண்மையைச் சொன்னால் நல்லவராகத் தான் இருப்பார்'- பாக்கியா பேச்சால் கடும் குழப்பத்தில் நிற்கும் ராதிகா

stella / 3 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. குடும்பப் பொறுப்பான அப்பாவிப் பெண்ணின் குடும்ப வாழ்வை பற்றி இது எடுத்துக் கூறுவதால் இல்லத்தரிசிகளை கவர்ந்த சீரியலாக வலம் வருகின்றது.

அத்தோடு ரி ஆர் பியிலும் முன்னணியில் நிற்கும் இந்த சீரியலில் இத்தனை நாள் குடும்பத்தை ஏமாற்றிக்கொண்டிருந்த கோபி தற்போது வசமாக சிக்கிக்கொண்டார். அவரே போதையில் ராதிகாவிடம் தன் குடும்ப போட்டோவை காட்டிவிடுகிறார்.

அதே நேரத்தில் தனக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதையும் பாக்யாவிடம் உளறிவிடுகிறார். இப்படி கோபி தனது உண்மை முகத்தை அவருக்கே தெரியாமல் வெளிகாட்டிவிட்டதால் சீரியல் சூடு பிடித்து இருக்கிறது.

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் ப்ரோமோவில் பாக்யா ராதிகாவை சந்தித்து பேசுகிறார். அப்போது ராதிகா தான் திருமணம் செய்ய இருந்த நபர் ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார்.

"அவரே உண்மையை சொன்னார் என்றால் அவர் நல்லவராக தான் இருக்க முடியும்" என பாக்யா கூறுகிறார். அது உன் கணவர் தான் என வெளிப்படையாக சொல்ல முடியாமல் ராதிகா அந்த நேரத்தில் குழப்பத்தில் நிற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement