• Jul 25 2025

இவங்க கருத்தைக் கேட்டு நான் கறுத்துப் போயிட்டன்.. 'வாத்தி' படத்தை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. இப்படமானது தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளராக திகழும் நாக வம்சி தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழியில் மொழியில் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. 


ரசிகர்கள் மத்தியில் இந்தப்படமானது சிறந்த வரவேற்பை பெற்று வருகின்ற அதேநேரம் பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு பிரபல யூடிப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அளித்துள்ள விமர்சனம் ஆனது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. 

அதாவது அவர் கூறுகையில் "ஹீரோவும், வில்லனும் மைண்ட் கேம் ஆடுவாங்கன்னு பார்த்தால் சாராயம் விற்குறவங்க மாதிரி அடியாளை விட்டு மோதி சண்டை போட்டுக்கிறாங்க. சமீபத்துல தமிழ், தெலுங்குல படம் சேர்த்து எடுக்குறேன் என்று சொல்லி இரண்டு படத்தை எடுத்து ஆடியன்சை பயமுறுத்தி வைச்சாங்க.


பிரின்ஸ் படத்தை தெலுங்குல படம் எடுத்து தமிழ் ரசிகர் தலையில கட்ட பார்க்குறீயான்னு புறக்கணிச்சுட்டாங்க. 'வாரிசு' படம் தமிழ், ஆந்திரான்னு இல்லாம வட இந்தியா பக்கம் போய் மொத்தமா ஹிந்தி சீரியலை எடுத்து வைச்சுட்டாங்க. ஆனா இந்த படத்துல அந்த கொடுமை எல்லாம் பண்ணல. முதல் பாதி எல்லாம் பரவாயில்லை.


தமிழ் நாட்டை பொறுத்தவரை இது ஒரு புது கதையும் இல்லை. சமீபத்துல தான் ராட்சசின்னு ஒரு படம் வந்துச்சு. சாட்டை, அடுத்த சாட்டைன்னு இப்போ இது அதுக்கு அடுத்த சாட்டையாய் வந்துருக்கு. படத்துல புதுசா ஒன்னும் இல்லை. லாஜிக்கும் இல்லை. படத்தேல்லாம் விட்டுட்டு நல்ல கருத்து சொல்லிருக்கேன் சொல்லுவாங்க. இவுங்க கருத்தை கேட்டு கேட்டு நான் எப்படி கறுத்து போயிட்டேன் பாருங்க என 'வாத்தி' படத்தை பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement

Advertisement