• Jul 25 2025

நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் நடந்த விபரீத மோசடி- கும்பலை மடக்கிப் பிடித்த போலீஸார்- பரபரப்பில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஐஸ்வர்யா ராய். இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இந்த நிலையில் நொய்டாவில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து தற்போது போலீஸிடம் சிக்கியுள்ளனர்.


இந்த மூன்று நபர்களும், முன்னாள் ராணுவ வீரரிடம் கேன்சர் குணப்படுத்தும் மூலிகை என கூறி அவரிடம் இருந்து 1.80 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளனர். மூவரில் இரண்டு பேர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் மற்றொருவர் கானா நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அது இந்தியா மதிப்பில் ரூபாய் 10.76 கோடி இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.


தற்போது குற்றவாளியிடம் இருந்து லேப்டாப் மற்றும் சிம் கார்டு, மொபைல் போன் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மூன்று குற்றவாளிகளும் சைபர் க்ரைம் நல்ல அனுபவம் உள்ளவர்கள், அதனால் இவர்களிடம் இருந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement