• Jul 24 2025

வாரிசா? துணிவா? எந்தப் படத்தை முதலில் பார்ப்பீங்க- ஓபனாக உண்மையைப் பேசிய ஜி.பி முத்து

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஜி.பி முத்து.  தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த இவர் காமெடி வீடியோக்களைப் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை எனலாம்.


தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்கேற்று பிரபல்யமானார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட ஜி.பி. முத்துவிடம் பத்திரிகையாளர்கள் துணிவு & வாரிசு படங்கள் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

பொங்கலுக்கு ரிலீஸாகும் துணிவு & வாரிசு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜி.பி. முத்து, "முதல்ல வந்து நம்ம  அஜித் சார் படத்துக்கு நான் போவேன்.


அஜித் சார் விஸ்வாசம் படத்துல நடிச்சாங்கள்ல அது ரொம்ப பிடிச்சிருந்தது. முதல்ல அஜித் சார் படத்தை (துணிவு) பார்த்துட்டு அப்பறம் இரண்டாவது விஜய் சார் படத்தை (வாரிசு) பார்ப்பேன்" என ஜி.பி‌. முத்து பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement