• Jul 25 2025

'வாரிசு' 200 கோடி வசூல் செய்யவே இல்லை.. எல்லாம் பொய்.. அடித்துக் கூறிய பிரபலம்.. தீயாய் பரவும் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் குடும்ப படமாக உருவான 'வாரிசு' திரைப்படமானது ஜனவரி 11-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இப்படமானது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி இருக்கின்றது. பொங்கல் பண்டிகையையொட்டி வந்த இப்படத்தினை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றார்கள். அதுமட்டுமல்லாது ரொம்ப காலம் கழித்து க்யூட் விஜய்யை பார்த்துவிட்டோம் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.


அதுமட்டுமல்லாது இப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வேட்டையினையும் நடாத்தி வருகின்றது. அதாவது 5 நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்த இப்படக் கடந்த 7 நாட்களில் ரூ. 210 கோடி வசூல் செய்துவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


இந்நிலையில், இதுகுறித்து பிரபல விநியோகஸ்தரும், தமிழக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ள ஒரு கருத்தானது தற்போது தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது அவர் கூறுகையில் "வாரிசு படம் ரூ. 200 கோடி வசூல் செய்ய 200 சதவீதம் வாய்ப்பே இல்லை. சோலோ ரிலீஸ் என்றால் கூட பரவாயில்லை. துணிவு படமும் இதனுடன் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆகையால் இவர்கள் சொல்லுகிற அளவிற்கு வாரிசு படம் வசூல் செய்திருக்க வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


இவர் இவ்வாறு பொய் வசூல் என வாரிசு படத்தைக் கூறியிருக்கின்றமை தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. 

Advertisement

Advertisement