• Jul 25 2025

வீட்டுக்கு வந்த பாக்கியாவைப் பார்த்து சந்தோஷப்பட்ட அவரது குடும்பத்தினர்- இனியாவைத் திட்டிய எழில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

சமையல் ஆடரை செய்து முடித்து விட்டு வீட்டுக்கு செல்வியுடன் வருகின்றார். பாக்கியாவைக் கண்ட எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பின்னர் சமையல் ஆடர் எப்படி முடிஞ்சது என்று கேட்க பாக்கியா அங்கு நடந்த எல்லாவற்றையும் சொல்ல எல்லோரும் மகிழ்ச்சியடைகின்றனர்.


பின்னர் பாக்கியா இனியாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு எக்ஸ்சாம் எல்லாம் நல்லா எழுதினியா என்று இனியா பற்றி விசாரிக்கின்றார்.தொடர்ந்து கோபி ராதிகாவுடன் வீட்டுக்கு வருகின்றார். அப்போது கோபி மட்டும் கீழே இருக்க ராதிகா மேலே செல்கின்றார்.கோபி இனியாிடம் எக்ஸ்சாம் பற்றி விசாரிக்க இனியாவும் பதில் சொல்கின்றார்.

இனியா கோபியுடன் பேசியதால் எழில் திட்ட இனியா டாடி மேல எனக்கு நிறைய கோபம் இருக்கு ஆனால் அவர் பேசும் போது என்னால் பேசாமல் இருக்க முடில என்று சொல்ல பாக்கியா நீ சின்ன பொண்ணு நீ டாடிக்கிட்ட பேசிறது தப்பு இல்லை என்று சொல்கின்றார்.


தொடர்ந்து பாக்கியாவுடன் சமையில் செய்தவர்கள் வந்திருக்க பாக்கியா அவர்களுக்கு சம்பளம் தராமல் விட்டதற்கு மன்னிப்புக் கேட்கின்றார். அதற்கு அவர்களும் பரவாயில்ல அக்கா உங்க பிரச்சினைகள் முடிஞ்சதும் தாங்க என்று சொல்கின்றார்.அத்தோடு அடுத்த ஆடர் ஏதும் வந்திருக்கா என்று கேட்க பாக்கியா ஆடர் வந்ததும் எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என்று சொல்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷாட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement