• Jul 24 2025

திருமணம் செய்த 7 மாதத்தில் பிக்பாஸ் பிரபலத்தை ஏமாற்றிய அவரது கணவர்- நகையைத் திருடி விட்டு ஓட்டம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் நடிகை ராக்கி சாவந்த்.இவர் அடிக்கடி சர்ச்சைகளிலம் சிக்கி வருகின்றார்.ஆதில் கான் என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பே ரகசியமாக திருமணம் செய்து விட்டதாக கூறினார் .இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.


அதன் பின் ராக்கி சவந்த்தின் அம்மா கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய அம்மாவின் இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வைரலாகியதால் ரசிகர்கள் தமது இரங்கலையும் தெரிவித்து வந்தனர்.


தற்போது கணவர் ஆதில் கானுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என குற்றம்சாட்டி இருக்கும் ராக்கி சாவந்த், அவர் தன்னை domestic abuse செய்ததாக போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.


இந்த புகாரில் தற்போது போலீசார் ஆதில் கான் துராணியை கைது செய்து இருக்கின்றனர். தற்போது அவரை போலீசார் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருக்கின்றனர்.ஆதில் கான் வீட்டில் இருந்த நகையை திருடிவிட்டதாக ராக்கி சவந்த்தின் சகோதரர் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement